பது/லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் பெயரை மேலும் பலரது மனதில் பதிய வைக்கும் கா.பொ.த உயர்தர பிரிவில்
கணித,விஞ்ஞான பிரிவுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் உவா மாகான கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவின் உதவிக் கல்வி பணிப்பாளர் திரு எஸ்.வெங்கடேஸ்வரன் அவர்களின் தலைமையில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்க செயலாளர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு பாடசாலையின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.