பாடசாலை கீதம்
நீல கடல் மோதும் நிலமெல்லாம் ஓடி - ஸ்ரீ
இராமகிருஷ்ணா புகழ் பாடிடுவோம்
அவர் ஆழப்பதித்தறிவாலயத்தை எங்கள்
ஆவி போலே தினமே மதிப்போம்
பரிதிவனவனின் கதிர் படும் இடமெல்லாம்
பாடசாலை புகழ் பாடிடுவோம்
உறுதியுடன் அதை கல்வியில் உயர்விக்க
உள்ளமுவந்தே உழைத்திடுவோம்
பண்ணெண கற்றோம் இக் கல்லூரியில்
கனிவுடன் பேணுவோம் அதை வாரீர்
மண்ணுள்ள காலமும் மங்காது அதன் புகழ்
மான்புரன் திகழவே வாழ்த்திடுவோம்
எத்தனை மேதைகள் இப்பாடசாலையில்
இத்தரம் பெற்றதில் ஐயமில்லை
நித்தமும் இங்கே கற்றிடும் மாணவர்
நிச்சயம் வித்தகர் ஆவார் இங்கே
தேயிலை குன்றிடை ஓடிடும் ஆறுகள்
தேசுரம் பெற்ற லுணுகலையில்
ஆயிரம் கண்களை அன்றாடம் திறந்திடும்
வானியின் புகழ் எங்கும் வாழியவே
வாழியவே... வாழியவே.... வாழியவே......