
பாடசாலை அறிமுகம்
பது/லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் வரலாற்று நோக்கம்.
பட்டிப்பொல எனும் பூர்விக நாமமுடைய இவ் வளம் மிக்க லுணுகலையில் அன்று ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டு இன்றும் இராமகிருஷ்ண மிஸனோடு தொடர்புடைய மிஸன் பாடசாலை என்றால் மிகையாகாது.இக்கல்லூரி கடந்து வந்த வழித்தடத்தில் முன்னுள்ள நாலரை தசாப்தங்கள் தீக்ககரையாக்கப்பட்ட வன்முறை செயல்களால் எம்மால் உறுதியான சுவடுகள் அறிய முடியாதுள்ளது.ஆனாலும் நாம் ஆய்ந்து அறிந்த வகையில் எம்மினத்தின் அறிவுக் கண் திறக்கும் கலையகத்தின் ஆரம்ப காலம் உங்கள் முன் விரிகிறது.
பிரித்தானிய காலணித்துவ நாடாக இலங்கை இருந்த காலம் அது (1938) இச் சூழலில் வசித்த பிள்ளைகளின் அறியாமையை இருள் போக்க உதவிக் கரம் நீட்டி வந்தார் ஒருவர்.அவர் தான் திருவாளர் எல்.கே.நாகலிங்கம் ஐயா அவர்கள் அவர் சிறந்த ஒரு பொதுநலவாதி.தனது சொந்தக் காணியில் மூன்று ஆசிரியர்களுடனும் 12 மாணவர்களுடனும் 1938 இல் முதன் முதலாக நாகலிங்கம் பாடசாலை என முதலில் அழைக்கப்பட்ட இக் கல்லூரி அங்குரார்ப்பணமாகியது.ஆரம்பித்த அவ் வள்ளல் தனது செலவிலேயே ஆசிரியர்களுக்கான விடுதி.உணவு,வேதனம் ஆகியவற்றையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஒளியை பின்பற்றும் ஐயா அவர்கள் தான் அமைத்த இக் கல்விகூட நிர்வாகத்தினை கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஸனிடம் ஒப்படைத்தார்.இவருடைய அறப்பணியி;ன் மற்றொரு செயற்பாடாக சிங்கள மொழி பேசும் பிள்ளைகளுக்காக யப்பாம விகாரைக்கு அருகில் ஒரு பாடசாலையை அமைத்துக்கொடுத்தார்.அன்னாரின் இக் க்விப் பணிகள் காலமெங்கும் நிலைத்து இன்றும் என்றும் அவர் புகழ் பரப்பபுவதாயுள்ளது.
இராமகிருஷ்ணா மிஸனின் கீழ் இயங்கிய இப் பாடசாலை 1968 ம் ஆண்டு அரசாங்கம் பொறுப்பேற்றது.அதன் பின் லுணுகலை தமிழ் மகா வித்தியாலயம் என பெயரிடப்பட்டது. பின்னர் 2008 ம் ஆண்டில்; மிஸனின் நிருவாகத்திற்கு சிறப்பளிக்கும் விதமாக லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி என பெயரிடப்பட்டது.