கல்லூரி முதல்வரிடமிருந்து……..
பது/லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி

பல்வேறு துறைகளிலும் வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கும் பது/லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி இன்று அனைவராலும் பேசப்படும் வகையில் சிகரமாய் உயர்ந்துள்ளது என்றால் மிகை ஆகாது. ஆரம்ப காலத்தில் க.பொ.த சாதாரண தரம் வரை காணப்பட்ட பாடசாலை 2001 ஆம் ஆண்டு திரு யு.தியாகலிங்கம் ஐயா அவர்களின் அயரா முயற்சியில் க.பொ.த உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்க வித்திட்டதோடு தொடர்ந்து திரு னு.இராஜரத்தினம் அவர்களின் மூலம் ஏனைய வணிக,விஞ்ஞான,உயிர் முறை தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகள் ஆரம்பமாகி அதிலும் வெற்றிக்கான எனது சேவையில் இறுதி காலத்தினை சிறப்பாக கொண்டு செல்ல கிடைத்த மாபெரும் கலைக்கூடமாக பதுஃலுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியை நான் பராமரிப்பதோடு அது தரும் சுவையான கனியாகிய மென்மேலான பல்துறை வளர்ச்சியை தொட்டுச் செல்ல இங்கு பணி புரியும் ஆசான்களையும் வளரும் மாணவச் செல்வங்களையும் மனதார வாழ்த்துவதில் அக மகிழ்கின்றேன்.
திரு.S.தியாகசுந்தரம்
அதிபர்
பது/லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி